என்.எல்.சி வேலை நிறுத்தம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி... தீவிரமடையும் போராட்டம்
நெய்வேலி: என்.எல்.சி வேலை நிறுத்தம் தொடர்பாக புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளதை அடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி தொழிலாளர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தை புதுச்சேரியில் இன்று நண்பகலில் தொடங்கியது.

தொழிலாளர் நல உதவி ஆணையர் சிவராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்.எல்.சி சார்பில் பொது மேலாளர் மகேஷ்வர், 13 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த போராட்டம் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications