இளவரசன் மரண சர்ச்சை- உடலை வாங்க தந்தை மறுப்பு! மறு பிரேத பரிசோதனைக்கு கோரிக்கை!!

Subscribe to Oneindia Tamil

Elavarsan father refuse to get the body
சென்னை: இளவரசனின் உடலை ஏற்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்திருந்த நிலையில் அவரது தந்தை இளங்கோவனோ நீதி கிடைக்கும்வரை உடலை வாங்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை திருப்திகரமாக இல்லை.. மறுபிரதேச பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ரஜினிகாந்தும் கூறியுள்ளார்.

தர்மபுரி திவ்யாவின் கணவர் இளவரசன் மர்மமான முறையில் இறந்தார். அவர் தலையில் அடிபட்டு இறந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை இளவரசின் உடலை வாங்கப் போவதாகவும் இறுதி அடக்கம் செய்ய 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர் சிந்தனைச் செல்வன் கூறியிருந்தார்.

ஆனால் இளவரசனின் தந்தையான இளங்கோவனோ, என் மகனின் உடலை எங்கள் மருத்துவர்கள், பிரமுகர்கள் முன்னிலையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். நீதிமன்றமும் தேவைப்பட்டால் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்று கூறியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதேபோல் இளவரசனுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் ரஜினிகாந்தும், பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி இல்லை. மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+