மாற்றுத்திறனாளிக்கு பணி கொடுத்த முதல்வர் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் மாற்றுத்திறனாளி ஒருவர் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாராம்.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் சமீபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் பலர் அதிமுக பிரமுகர்களின் உறவினர்கள் என்பது ஊரறிந்த உண்மை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு வரும் வழியில் மாற்றுத்திறனாளி ஒருவர் அவரை சந்தித்து பணி வேண்டி மனு கொடுத்தாராம்.
இதனையடுத்து தன்னிடம் மனு கொடுத்த அந்த நபரின் பெயரை பணி நியமனப் பட்டியலில் சேர்க்கச் சொல்லிக் கையெழுத்திட்டாராம் ஜெயலலிதா.
முதல்வரின் மனிதாபிமானம் அறிந்து குளிர்ந்து போன கோட்டை உயர் அதிகாரிகள் வட்டாரம், அவரது முகவரியைத் தேடிப் பிடித்துப் பணி நியமன உத்தரவை அளித்தார்களாம்.












Click it and Unblock the Notifications