'விஸ்க்கி விஸ்க்கி' நடந்தாலும் இந்த தாத்தாவுக்கு 'விஸ்கி' அடிக்காம இருக்க முடியாதாம்!
லண்டன்: இங்கிலாந்திலேலேய ரொம்ப ரொம்ப சீனியர் அஜீத்.. அதாங்க சிட்டிசன் இந்த தாத்தாதான். வயசு 110. இருந்தாலும் தாத்தா செம கில்மாவாக இருக்கிறார். இந்த வயதில் கூட விஸ்கி குடிக்காமல் பொழுதை சாய்க்க மாட்டேன் என்று அடம் புடிக்கிறாராம்.
சமீபத்தில் இந்த தாத்தா தனது 110வது பிறந்த நாளை செம கிராண்ட்டாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
வயதானாலும் தாத்தாவின் ஸ்டைலும், வாலிப முறுக்கும் கொஞ்சம் கூட குறையவே இல்லையாம். அப்படியே இருக்கிறாராம்.

பெயர் டாரன்ட்.. பேச்சோ டெரர்
சரி தாத்தா பெயரைத் தெரிஞ்சுக்குவோமா... பெயர் ரால்ப் டாரன்ட். பேசினால் செம டெர்ரராக பேசுகிறார்.

அதே கரட்டாண்டி...
காதல் படத்தில் வசனம் வருமே அதே கரட்டாண்டி என்று... அது போலத்தான் நம்ம ரால்ப்பும். இளம் வயதில் இருந்தது போலவே இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறாராம்.

பெக் அடிச்சாதான் பேக்கப்
தினசரி தாத்தாவுக்கு சில பெக் விஸ்கி உள்ளே போக வேண்டும். அப்போதுதான் அவர் வலம்புரி ஜானாவாராம்.. அதாவது அந்த நாள் இனிய நாளாகுமாம்.

வயசுல என்னய்யா இருக்கு....
எப்படி இப்படி தாத்தா என்று அவரிடம் கேட்டால், இப்படித்தான் எப்பவுமே என்று கவுண்டமணி ஸ்டைலில் நக்கல் பதில் கொடுக்கிறார். வயசுல என்னய்யா இருக்கு என்பதுதான் அவரது பதிலாகவும் இருக்கிறது...

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா....
சரி வயசாயிருச்சே.. ஏதாவது டல்லாக உணர்கிறீர்களா என்று கேட்டால், இதுக்கெல்லாமா அலட்டிக்குவாங்க. வயதாவது என்பது இயற்கை. அதை மனதால் சரி செய்யலாமே என்று உளவியல் நிபுணர் ரேஞ்சுக்குப் பேசுகிறார்.

79 வருஷம் ஒரே மனைவியுடன்
மனுஷன் பேசினால்தான் சேட்டைத்தனமாக இருக்கிறது. ஆனால் 79 வருடங்கள் ஒரே மனைவியுடன் வாழ்ந்தவர் இவர். இவரும், இவரது மனைவி பிலிஸிஸும் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்த இங்கிலாந்து தம்பதிகளாவார்கள்.

102 வயதில் பாட்டி மரணம்
அந்தப் பாட்டி தனக்கு 102 வயது இருந்தபோது மரணமடைந்தார். தாத்தாவுக்கு பிலிஸில் மீது ரொம்பப் பிரியமாம். போன வருடம்தான் பாட்டி இறந்தார்.

தனியாத்தான்....
தாத்தா தனியாகத்தான் வசிக்கிறார். அவரே சமைக்கிறார், அவரே தனியே உட்கார்ந்து விஸ்கியை உள்ளே தள்ளுகிறார். யாருடைய உதவியும் அவருக்குத் தேவையில்லை என்று தெம்பாகப் பேசுகிறார்.

அப்பப்ப லேசான வலி ... அம்புட்டுதேன்...
இவருக்கு பெரிய அளவில் உடல் உபாதைகள் இருந்ததில்லையாம். அவ்வப்போது எப்பாவது உடல் வலி வருமாம். அவ்வளவுதானாம். அப்ப கூட மாத்திரை சாப்பிட மாட்டாராம்.. மருந்துதான் .. அதாவது விஸ்கியை எடுத்து மடக் மடக்கென்று ஒரு வாய் ஊற்றிக் கொள்வாராம்.

செம பலமா இருக்கோம்ல...
அதெப்படி விஸ்கி மருந்தாகும் என்று கேட்டால், விஸ்கி சாப்பிடுவதால் நான் கெட்டுப் போகவில்லை. மாறாக வயது ஆக ஆக எனக்குள் பலவானாக உணர்கிறேன் என்கிறார்.

மொத்தமாக கூடி பார்ட்டி
தாத்தாவின் பிறந்த நாளையொட்டி அவரது குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் சேர்ந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். தாத்தாவும் விஸ்கியை எடுத்து ஊற்றி சியர்ஸ் சொல்லி குடித்து குஷியாக காணப்பட்டார்...
நாமளும் தாத்தாவுக்கு சொல்லுவோம்.. சியர்ஸ்!.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications