பெண் தொடர்பு.. கண்டித்த மனைவியை கொன்று விபத்து என்று டிராமா போட்ட கணவர் கைது
தூத்துக்குடி: பல பெண்களுடன் தான் வைத்திருந்த தொடர்பைக் கண்டித்த மனைவியை குத்திக் கொன்று விட்டு விபத்து என்று நாடகமாடிய கணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் 35 வயதான சுதாகர். இவருக்கும், சாமியார்த்தோப்பைச் சேர்ந்த சூரியா என்பவருக்கும் கடந்த மாதம்தான் திருமணம் நடந்தது. புது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த சுதாகர் நேற்று ஆம்னி வேனில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலுக்குச் சென்றார்.
இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது மனைவியுடன் மோதல் ஏற்பட்டுள்ளது சுதாகருக்கு. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதைக் குறிப்பிட்டு சூர்யா கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சுதாகர், கத்தியை எடுத்துக் குத்தி விட்டார். அதில் சூர்யா படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதைப் பார்த்துப் பயந்து போன சுதாகர், காரை சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து போல செட்டப் செய்து விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து பிரேதத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சூர்யா கத்தியால் குத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சுதாகரை பிடித்து விசாரித்தபோது உண்மையைக் கக்கி விட்டார்.
சுதாகரைக் கைது செய்து தற்போது போலீஸார் விசாரணையைத் தொடர்கின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications