இளவரசன் எழுதிய காதல் கடிதம் ஊடகங்களில் வெளியானது எப்படி? போலீஸ் அதிர்ச்சி!

கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் தன்னுடைய மரணத்திற்கு முன் தனது தந்தை இளங்கோ, காதல் மனைவி திவ்யா ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா கர்க் வெளியிட்டார்.
அந்தக் கடிதம் இரண்டு பகுதியாக எழுதப்பட்டு இருந்தது. ஒரு பகுதி திவ்யாவுக்கும், இன்னொரு பகுதி அவரது தந்தை இளங்கோவுக்கும் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தில் உள்ளது இளவரசன் கையெழுத்து தானா என்பதை உறுதி செய்ய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவரது கையெழுத்தும் காதல் கடிதமும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆய்வு முடிவு வந்த பிறகு தான் அந்த கடிதத்தை எழுதியது இளவரசனா என்பது தெரிய வரும்.
ஒரு கடிதத்தில் 'தன்னுடைய சாவுக்கு நானே காரணம் என்றும், வேறு யாரும் காரணம் இல்லை' என்றும் அந்த கடிதத்தில் இளவரசன் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் உள்ளது இளவரசன் கையெழுத்து தானா என்று உறுதிப்படுத்த அவரது தந்தை இளங்கோ மற்றும் தாயார் கிருஷ்ணவேணி ஆகியோரிடம் கடிதத்தை காட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரத்தை தெரிவிக்க மறுத்த போலீசார் கடித நகலையும் வெளியிட மறுத்து விட்டனர். ஆனால் வேறு வழியில் கடித நகல் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி திவ்யாவிற்கு எழுதிய கடிதம் வெளியானதால் அதை படித்து அவர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே இளவரசன் சட்டைப் பையில் இருந்து கடிதத்தை எடுத்தவரே அதை நகல் எடுத்து விட்டு போலீசாரிடம் கொடுத்து இருக்கிறார். பின்னர் அதன் நகலை பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் கொடுத்து இருக்கிறார் எனவே அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications