அவதூறு வழக்கு: தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் நேரில் ஆஜராக உத்தரவு!
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி, தொரப்பட்ட வழக்கில், தே.மு.தி.க. சட்ட மன்ற கொறடா சந்திரகுமார் வரும் ஆகஸ்ட் 12 ம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேதி ராஜபாளையம் ஹவகர் மைதானத்தில் கடந்த ஜனவரி மாதம் 6 ம் தே.மு.தி.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அக் கட்சியின் சட்ட மன்ற கொறடா வி.சி.சந்திரகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக , வி.சி.சந்திரகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதி மன்றத்தில், அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 12 ம் தேதி நீதி மன்றத்தில் சந்திரகுமார் நேரில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டார்.
அதிமுக கூட்டணியை விட்டு தேமுதிக பிரிந்து வந்ததில் இருந்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றது. அதன் பலனாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அடுத்து அவரது மனைவி பிரேமலதா, அடுத்து அக் கட்சியின் சட்ட மன்ற கொறாடா சந்திரகுமார் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications