இஷ்ரத் என்கவுன்ட்டரில் சிக்கிய ஐபி அதிகாரி.. சுஷ்மா குடும்பத்துக்கு நெருக்கம்: திக்விஜய்சிங்
டெல்லி: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் சிக்கிய ஐபி அதிகாரி ராஜேந்திர குமார், பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நரேந்திர மோடி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங்.

இஷ்ரத் வழக்கு என்ன?
2004ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகரில் மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல ஊடுருவிய தீவிரவாதிகள் என்று போலீசார் கூறினர். ஆனால் இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, நடந்தது போலி என்கவுன்ட்டர் என்று கூறியதுடன் 4 பேரையும் ஒரு அறையில் அடைத்து வைத்து பின்னர் சுட்டுக் கொன்றதாகவும் கூறியது. மேலும் இந்த வழக்கில் மத்திய உளவு அமைப்பான ஐபியில் பணிபுரியும் ராஜேந்திர குமாருக்கும் தொடர்பு இருப்பதால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியது சிபிஐ.
தடலாடி திக்விஜய்சிங்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் புதிய சர்ச்சையை விதைத்து விட்டிருக்கிறார். அவர் தனது பேட்டியில், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய ராஜேந்திரகுமார், பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கெளசல் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் (மிசோரம்) ஆளுநராக இருந்த போது நெருக்கமானவராக இருந்தார் என்பது உண்மை இல்லையா?
ஐபி அதிகாரியாக அகமதாபாத்தில் அத்வானி அமைச்சராக இருந்தபோது நியமிக்கப்பட்டது உண்மை இல்லையா? அப்போது அகமதாபாத் போலீஸ் அதிகாரியாக இருந்த ஜி.எல்.சிங்கால் சிபிஐயிடம் அளித்த வாக்குமூலத்தில் குஜராத் போலீசார் போலி என்கவுன்ட்டர் நடத்த ராஜேந்திர குமார் உதவினார் என்பது உண்மை இல்லையா?
அதனால்தான் நரேந்திர மோடி ஒரு கதாநாயகனார்... தீவிரவாத செயல்களை செய்பவர்களே முஸ்லிம்கள்தான் என்று மக்களின் மனதிலும் பதியப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications