ஒடிஷாவுக்கும் குஜராத்தும் ஒற்றுமைகள் உண்டு: நரேந்திர மோடி

குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபா பிரசாரக் குழு தலைவருமான நரேந்திர மோடி இன்று ஒடிஷா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று காலை 9.20 மணிக்கு ஒடிஷா தலைநகர் புவனேஸ்வர் சென்றடைந்த நரேந்திர மோடியை அம்மாநில பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் சாலை வழியாக அவர் பூரிக்கு காலை 10.50 மணிக்கு சென்றார்.
அங்கு பாலபத்ரா, சுவப்தரா ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது உத்தர்காண்ட் வெள்ளத்தில் இறந்தோரின் ஆத்மா சாந்தியடைய மோடி பிரார்த்தித்தார். பின்னர் கஜபதி மஹாராஜா அரண்மனையில் மன்னர் கஜபதி திக்திவ்யசிங் தேவை சந்தித்தார். அதைத் தொடர்ந்து கோபர்தான் மடத்தில் பூரி சங்கராச்சாரியாரிடம் மோடி ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஒரிய மொழியிலேயே பேசிய மோடி, சோம்நாத் மண்ணில் இருந்து பூரி புனித தலத்துக்கு ஜெகநாதரின் ஆசியைப் பெறுவதற்காக வந்துள்ளேன். இந்த இடத்தை நான் போற்றி வணங்குகிறேன். இன்று குஜராத் மாநிலம் வளர்ந்துள்ளது எனில் என்னுடைய ஒடிஷா சகோதரர்களால்தான். அவர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
குஜராத்துக்கும் ஒடிஷாவுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. ஒடிஷாவின் கோனார்க்கில் சூரிய கோயில் உள்ளது. கிழக்கில் உதயமாகும் போது முதலில் சூரிய கதிர்கள் அக்கோயிலை தழுவிச் செல்லும். மாலையில் மேற்கில் சூரியன் மறையும் போது குஜராத்தின் மோதெராவில் சூரியக் கதிர்கள் பட்டு மறையும் என்றார்.
மோடி ஒரிய மொழியிலேயே பேசியவுடன் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் உட்பட பலரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications