சென்னையில் இடி மின்னல், பேய்க் காற்றுடன் இரவெல்லாம் மழை!
சென்னை: சென்னையில் நேற்று இரவெல்லாம் இடி மின்னல் பேய்க் காற்றுடன் கனமழை பெய்தது.
குடிநீரை குடம் ரூ 10 என விலை கொடுத்து வாங்கும் அவலத்தில் உள்ள சென்னை மற்றும் புறநகர்வாசிகளுக்கு இது சற்றே ஆறுதலைத் தந்தது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை முதல் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு 9 மணிக்கு பெரும் சூறைக் காற்று புழுதியை வாரி இறைத்தபடி கடந்து போனது. அடுத்த சில நிமிடங்களில் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

சென்னை மற்றும் புறநகரின் பெரும்பாலான பகுதிகளில், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications