தமிழில் வாதாடிய வழக்கறிஞர்...மனு தள்ளுபடி செய்த நீதிபதி: மீண்டும் விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழில் வாதாடியதால் தள்ளுபடி செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு ஏற்றது.
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாட வாய்மொழி அனுமதி வழங்கியிருந்தது உயர்நீதிமன்றம். அந்த அனுமதியின் பேரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடி வந்தார்கள். நாளடைவில் தமிழில் வாதாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி ஒரு வழக்கில் ஆஜரான தமிழ் ஆர்வலரும், வழக்கறிஞருமான பகத்சிங் தமிழில் வாதாடினார். நீதிபதி மணிக்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
"உயர்நீதிமன்ற அலுவல் மொழி ஆங்கிலம் தான். அதில் வாதாடுங்கள் " என்று நீதிபதி கூறினார். ஆனால், பகத் சிங் அதனை ஏற்காமல் தொடர்ந்து தமிழில் வாதாட முற்பட்டதால், அந்த வழக்கையை தள்ளுபடி செய்தார் நீதிபதி.
அதேபோல், வழக்கறிஞர் பகத் சிங் ஆஜரான மற்றொரு வழக்கையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி மணிக்குமார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிம் புகார் செய்யப்பட்டது. வழக்கின் தன்மைக்குள்ளேயே போகாமல், தமிழில் வாதாடியதற்காக அதனை தள்ளுபடி செய்வது சரியல்ல என்று போராடத் தயாரானார்கள் வழக்கறிஞர்கள்.
இதனை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் இன்று (16.07.13) மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார் நீதிபதி மணிக்குமார். ஆனால், வழக்கறிஞர் பகத்சிங் இன்று ஆஜராகாததால் அந்த வழக்குகள் மீதான விசாரணையை வருகின்ற வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் ஆஜராகி, மீண்டும் தமிழில் தான் வாதாடுவேன் என்று அறிவித்துள்ளார் வழக்கறிஞர் பகத்சிங் அதனால் இப்போதே பரபரப்பு கிளம்பியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications