நாய்க்குட்டி கமெண்ட்: மோடி மீது வழக்கு!

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
பாட்னா: குஜராத் கலவரம் குறித்து கருத்து தெரிவித்த மோடி, அதில் இறந்தவர்களை நாய்க்குட்டியுடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக அவர் மீது அவதூறு மற்றும் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம், கோத்ரா கலவர சம்பவம் குறித்து வருந்துகிறீர்களா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ஒரு நாம் பயணம் செய்யும்போது காரில் நாய்க்குட்டி அடிப்பட்டால் வருத்தப்பட மாட்டோமா, என்று கருத்துக் கூறியிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி நரேந்திரமோடி மீது பாட்னா பல்கலைக்கழக புள்ளியியல் துறை ஆசிரியர் பினெய் குமார்சிங் என்பவர் பாட்னா தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் தேச துரோக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

முதல் வகுப்பு ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை வருகிற 31-ந் தேதி அன்று நீதிபதி குமரோ கியாதிசிங் விசாரிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+