நிலக்கரி ஊழல்: விசாரணை பற்றி மத்திய அரசுக்கு சொல்லக்கூடாது… சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகவும்,இதனால் அரசுக்கு ரூ. 1.82 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பார்லி.யில் பா.ஜ.எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பிரதமர்பதவி விலக கோரின.இந்நிலையில்நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்னர் மத்திய சட்ட அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் சரிபார்த்து அறிக்கையை திருத்தியதாக , சி.பி.ஐ.இயக்குனர் தெரிவித்தார்.
இதையடுத்து சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார் பதவி விலகினார். இந்நிலையில்இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. இதில் சி.பி.ஐ. சார்பில் கூறுகையில்,விசாரணை தொடர்பாக ,அரசின் அனுமதி பெறவே விவரம் பகிரப்பட்டதாக கூறப்பட்டது.
வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த ஊழல் வழக்கின் விசாரணை தொடர்பாக ஏதேனும் இடையூறுகள் இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
இனி சி.பி.ஐ. அறிக்கையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் சி.பி.ஐ.வழக்கறிஞர்களிடம் ஆலோசனை என்ற பெயரில் விவரங்களை தெரிவிக்க கூடாது. இவ்வாறு உச்சநீதிமன்றம், சி.பி.ஐ.க்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. விசாரணை குழுவில் இருந்து, ஊழலில் சிக்கிய எஸ்.பி. விவேக் தத்தை நீக்க கோரும் சி.பி.ஐ. வேண்டுகோளை ஏற்று அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications