மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதை எதிர்த்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபூர் மற்றும் நீதிபதி விக்ரம்ஜித் சென் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு சேர்த்து பொது நுழைவுத் தேர்வு நடத்துவது இந்திய மருத்துவ கவுன்சிலின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. மருத்துவ படிப்புகளுக்கு பொதுத் நுழைவுத் தேர்வு நடத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலும், தனியார் கல்லூரிகளும் பழைய விதிமுறைப்படி மாணவர் சேர்க்கையை நடத்துமாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். பழைய விதிமுறைப்படி இந்திய மருத்துவ கவுன்சில், மாநில அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் தனித்தனி தேர்வு நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது நுழைவுத் தேர்வுக்கு மூன்றாவது நீதிபதி அனில் ஆர். தாவே ஆதரவு தெரிவித்தார். இருப்பினும் அதிகபட்சமாக 2 நீதிபதிள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர்களின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications