பாதுகாப்பு எப்படி இருக்கிறது... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய படை ஆய்வு
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவிலில் குண்டு வெடித்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்டவற்றுக்கு தாக்குதல் அபாயம் இருப்பதாகவும் உளவுப்பிரிவு எச்சரித்திருந்தது.
இதையடுத்து இந்தக் கோவில்களில் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரம் கோவிலில் மத்திய பாதுகாப்புப் படைக் குழு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டது. இது நாளையும் தொடரும்.
அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications