சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் ஷாக் அடித்து 2 ராணுவ வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் மின்சாரம் தாக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பரங்கிமலையில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு நேற்று மாலை ராணுவ வீரர்கள் மைதானம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்கு பேர் அலுமினிய ஏணியை தள்ளிக் கொண்டு வந்தனர். அந்த ஏணி 12000 வோல்டேஜ் கொண்ட உயர் மின்சாரம் பாய்ந்த பகுதியில் உரசியது தாக்கியது.
இதில், ராணுவ வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் இமாச்சல்பிரதேசத்தை சேர்ந்த ரஷன் சிங், உத்ரகண்ட் மாநிலத்தை சேர்ந்த மன்வர்சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications