ஸ்பெக்ட்ரம் வழக்கு:அனில் அம்பானி, டினா அம்பானி ஆஜராக கோர்ட் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கி இருந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 3 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அனில் அம்பானி, டினா அம்பானி ஆகியோரை சாட்சியமளிப்பதற்காக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இம்மனு மீது விசாரணை நடைபெற்றது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications