போராட்டம் கை கொடுத்தது.. மதுரை நீதிமன்றத்தில் இனி தமிழில் வாதாட அனுமதி!!

Subscribe to Oneindia Tamil

Madurai high court bench
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை திரும்பப் பெறுவதாக நீதிபதி மணிக்குமார் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இனி அந்த நீதிமன்றத்தில் தமிழில் வாதாட முடியும்.

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர் பகத்சிங் என்பவர் 2 வழக்குகளை தொடர்ந்திருந்தார். இந்த 2 வழக்குகளும் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் தமிழில் வாதாடினார். ஆனால் இதற்கு நீதிபதி மணிக்குமார் அனுமதி மறுத்தார். தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று கூறி 2 வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடியும் செய்தார்.

இது கடும் எதிர்ப்பை உருவாக்கியது. மதுரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இன்று நீதிபதி மணிக்குமார், தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று தாம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும் தமிழில் வாதாட அனுமதிப்பதாகவும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+