பாஜக, இந்துமுன்னணியினர் தொடர் படுகொலை: தமிழகத்தில் 22ல் பந்த்; பா.ஜ.க. அறிவிப்பு
சேலம்: பா.ஜ.க.வினர் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்து வரும் 22ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. உண்மை கொலையாளிகளை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் சேலம் மற்றும் திருப்பூரில் இன்று முழு அடைப்பு நடக்கிறது. மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் பாஜகவினர் தொடர் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இந்து இயக்க தலைவர்களும், பா.ஜனதா கட்சியினரும் தொடர்ந்து வெட்டப்பட்டும், கொல்லப்பட்டும் வருகிறார்கள்.
இதை தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பயங்கரவாதிகள் தமக்கு அரசு ஆதரவு இருப்பது போன்று நினைக்கிறார்கள்.
கடந்த 1-ந்தேதி வேலூரில் இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பன் கொல்லப்பட்டார். இதுவரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
பரமக்குடியில் பா.ஜனதா கவுன்சிலர் முருகன், வேலூரில் பா.ஜனதா மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
கன்னியாகுமரியில் பா.ஜனதா தலைவர் எம்.ஆர்.காந்தி, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆனந்த், திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ் செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வெட்டப்பட்டுள்ளார்கள்.
பா.ஜனதா மற்றும் இந்து இயக்க தலைவர்களை குறி வைத்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்வது காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்க செய்துவிடும். ஆயுதம் எடுத்து தாக்குதலில் ஈடுபடும் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களும் ஆயுதம் எடுக்கும் சூழ்நிலை உருவாகி விடும்.
இதனைக்கண்டித்து வரும் 22ஆம் தேதி பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் நடத்த உள்ளதாக அவர் கூறினார். இந்த முழு அடைப்புக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பொன் ராதா கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications