இங்கிலாந்து இளவரசியின் குழந்தை சிம்மராசியில் பிறக்குமா?
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேத் மிடில்டன் தற்போது பிரசவத்தை எதிர்நோக்கியுள்ளார். கடந்த 13ம் தேதியே பிரசவ தேதி என கூறப்பட்ட நிலையில் இன்னமும் குழந்தை பிறக்கவில்லை.
இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அரண்மனைக்கு வரப்போகும் புதிய வாரிசை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். பிரசவத்துக்காக லண்டன் செயிண்ட்மேரிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதில் தொடங்கி நிறம், தோற்றம், பெயர் வரை பெட்டிங் கொடி கட்டிப் பறக்கிறது. அதைவிட ஜோசியர்களும் இதை வைத்து கல்லா கட்டி வருகின்றனர்.

கர்ப்பிணி கேட்
இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் திருமணம் எவ்வாறு ஊடகங்களில் பரபரப்பை கிளப்பியதோ அதே போல இளவரசி கர்ப்பமானதும் பரபரப்பான செய்தியாக வெளியாகிவருகிறது.

நெருங்கும் பிரசவம்
இதே பிரசவதினம் நெருங்கிவிட்டது. குழந்தை பிறந்த தகவலை கேட்கும் ஆவலில் அரச குடும்பத்தினர் டெலிபோன் அருகில் காத்திருக்கிறார்கள். இதேபோல் இங்கிலாந்து மக்கள் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இளவரசியின் பிரசவ செய்தியை கேட்க ஆவலில் உள்ளனராம்.

ஊடகங்களில் செய்தி
மருத்துவமனை முன்பு நூற்றுக்கணக்கான போட்டோ கிராபர்கள், செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக குவிந்துள்ளனர். இதனால் எப்போதுமே அந்தப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மணிக்கொருமுறை லைவ் செய்தியும் ஒளிபரப்புகின்றனர்.

கணவரின் கவலை
குழந்தை பிறப்புக்காக ராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்துள்ள இளவரசர் வில்லியம் கேத் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிக்கு தினமும் ஹெலிகாப்டரில் சென்று கவனித்து வருகிறார். பதற்றத்தை தணிக்க சகோதரருடன் போலோ விளையாட்டிலும் ஈடுபடுகிறாராம்.

சிம்மராசியில் பிறக்குமா?
எந்த நேரத்திலும் கேத்தே பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பிரசவ தேதி ரகசியமாக வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 23-ந்தேதிக்குப்பின் இளவரசிக்கு குழந்தை பிறந்தால் அது சிம்மராசியில் அமையும் என்று சிலர் கணித்து சொல்லியுள்ளனர். எனவே அதற்காக வெயிட்டிங் இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

பரபரக்கும் சூதாட்டம்
இதனிடையே கேத் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்று இங்கிலாந்தில் பெரிய அளவில் சூதாட்டம் நடக்கிறது. குழந்தைக்கு பெயர்களை தேர்வு செய்தும் அனுப்பி வைத்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications