வெப்பச் சலனம் மற்றும் குறைந்த காற்றழுத்தம்.. இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!
சென்னை: வெப்பச் சலனத்தால் தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை மேலும் 2 நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை கர்நாடகா, கேரளாவில் பெய்து வருகிறது. அது தீவிரமும் அடைந்துள்ளது. இந்த மழை காரணமாக தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சிப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. அதேசமயம், வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலையிலும் இரவிலும் மழை அடித்துக் கொட்டுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதால் நகரே குளிராகியுள்ளது.

இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்குமாம். இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஓரளவு மழை கிடைத்து வந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது.
இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது வங்க கடலில் ஒடிசாவுக்கும், ஆந்திராவுக்கும் இடையே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு மழை கிடைக்கும்.
சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று தெரிவித்தனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications