ப்ளஸ்டூவில் மதிப்பெண் கூடுதலாக பெற, தமிழ்மொழியை புறக்கணிப்பதா? சீமான் வேதனை

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் மேனிலைப் பள்ளிகளில் பிளஸ்2 படிப்பில் இரண்டாவது மொழிப் பாடமான தமிழை புறக்கணித்துவிட்டு பிரெஞ்ச், ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தேர்வு செய்து படிக்கும் நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இப்படி தமிழ் மொழியை படிப்பதை தவிர்ப்பது திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பள்ளி பாடத் திட்டத்தில் முதல் மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழிப் பாடமாக தமிழும் இருந்து வருகிறது. தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்கிற காரணத்தைக்காட்டி, தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதம், பிரஞ்ச், ஜெர்மன் ஆகிய ஏதாவது ஒரு அந்நிய மொழியை தேர்வு செய்து படித்துவிட்டு தேர்வு எழுதுகிறார்கள்.
மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படும் பள்ளிகளில் இரண்டாவது மொழிப் பாடமாக இருக்கும் தமிழுக்கு பதிலாக அயல் மொழிகளை படித்து தேர்வு எழுதுவது ஊக்குவிக்கப்படுகிறது. அந்தப் பாடத் திட்டம் மிக எளியதாக தயாரிக்கப்பட்டுள்ளதால், அரசு நடத்தும் மேனிலைத் தேர்வில் அதிக மதிப்பெண்களை அதாவது 200க்கு 199 என்றெல்லாம் பெறுவது சுலபமானது என்பதனால் பல மாணாக்கர்கள் அயல் மொழியை தேர்வு செய்து படிக்கிறார்கள்.
ஆனால் பிளஸ் 2 வகுப்பிற்கான தமிழ் மொழி பாடத்திட்டம் உயர்ந்த நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதில் தங்களால் 200க்கு 160 மதிப்பெண் கூட பெற முடியாது என்று அந்த மாணவர்களும் கருதுகின்றனர்.
தமிழ் மொழி தொடக்கப்பள்ளியில் இருந்து கற்றுவரும் மாணவர்களுக்கு தமிழக அரசு பாடத்திட்டம் எந்த விதத்திலும் கடினமானதாக இல்லை. ஆனால், பிற மாநிலங்களில் சென்று தங்களை பட்டப்படிப்பை தொடர நினைக்கும் நகர வாழ், மேல் தட்டு வீட்டுப் பிள்ளைகள் அயல் மொழிப் பாடங்களை எடுத்து அதிக மதிப்பெண் பெற இப்படியான ஒரு வழியை கடை பிடிக்கிறார்கள்.
இப்படி ஒரு நிலையை தமிழக அரசு தடுத்து நிறுத்தா விட்டால், நாளையடைவில், தமிழ் மொழியை படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தமிழ் மண்ணிலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே, இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழை புறக்கணிக்கும் நிலையை தடுத்திட வேண்டும்" என்று சீமான் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications