கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது: தமிழக அரசு
சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் இரண்டு வழக்குகளை தொடர்ந்திருந்தார். முதல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத சூழலில் கூடங்குளத்தில் மின்உற்பத்தியை தொடங்க அனுமதித்தது தவறு என்றும் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். 2வது வழக்கில், உச்சநீதிமன்றம் விதித்த 15 நிபந்தனைகளையும் நிறைவேற்றாத கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மின் உற்பத்தியைத் தொடங்க தடை விதிக்க வேண்டும் என்று சுந்தரராஜன் வலியுறுத்தியிருந்தார்.

மற்றொரு வழக்கை வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்திருந்தார். அவர் தமது மனுவில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட 152 வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணையை, மாநில அரசு செயல்படுத்தவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்குகளின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோமையாஜி, கூடங்குளத்தில் இயல்பு நிலைமை திரும்பவில்லை. இதனால் வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 3 வழக்குகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications