உ.பியில் கவுரவக் கொலை: காதலை கைவிட மறுத்த தங்கையைச் சுட்டுக் கொன்ற அண்ணன் தலைமறைவு
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் காதலைக் கைவிட மறுத்ததால், குடும்ப கௌரவம் கருதி தங்கையை சுட்டுக் கொன்று ரகசியமாக புதைத்த அண்ணனை போலீசார் தேடி வருகின்ரனர்.
உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டம், கங்கேரு கிராமத்தை சேர்ந்த சய்மா என்ற 17 வயது பெண், அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். சங்மாவின் காதல் விவகாரம் அறிந்த அவரது குடும்பத்தினர் காதலர்களை எச்சரித்து வந்துள்ளனர்.
ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சங்மாவின் அண்ணன் ராசாகான், நேற்று இது குறித்து தங்கையோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.
குடும்ப கௌரவத்திற்கு இழிவு உண்டாகும் வகையில் காதலித்து வரும் சங்மாவை, ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளான் ராசாகான். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் சங்மா. ஊருக்கு தெரியா வண்ணம் சங்மாவின் பிணத்தை, வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளனர் குடும்பத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, புதைக்கப்பட்ட சங்மாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ராசாகானை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications