அரச வாரிசு பிறந்த மகிழ்ச்சி : 22ந்தேதி பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி நாணயம் பரிசு அறிவிப்பு
லண்டன்: இங்கிலாந்து அரசப்பரம்பரையின் அடுத்த வாரிசான இளவரசர் வில்லியமின் மகன் பிறந்த தினத்தன்று இக்கிலாந்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்திய மதிப்பில் ரூ 2,500 மதிப்புள்ள வெள்ளி நாணயம் வழக்கப்பட இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தை ஆனா, பெண்ணா என உலகமே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், கடந்த 22ம் தேதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் கேட்.
அரச குடும்பத்தின் வாரிசை வரவேற்க நாடெங்கிலும் விழாக்கோலம் பூண்டிருக்க, இங்கிலாந்து அரண்மனை மக்களுக்கோர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது, குட்டி இளவரசன் பிறந்த அன்று நாடெங்கிலும் பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி நாணயம் அன்பளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்திய மதிப்பில் இந்த வெள்ளி நாணயங்கள் ஒவ்வொன்றும் சுமார் 2,500 மதிப்பானது. அரச முத்திரைப் பதிக்கப்பட்ட நீலம் அல்லது இளஞ்சிவப்பு பைகளில் வைத்து இந்த நாணயங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி நாணயத்தைப் பெற தகுதியான குழந்தைகளை உடையவர்கள், அதற்கான தகுந்த சான்றிதழ்களோடு ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications