சீனா: 24 மாடி ஜன்னலில் தலை சிக்கி தவித்த 5 வயது சிறுமியின் திக்..திக்.. நிமிடங்கள்

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்பாராத விதமாக 24 வது மாடி ஜன்னல் கம்பியில் மாட்டிக் கொண்ட 5 வயது சிறுமி, பெரும் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டாள்

சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் உள்ள தலாய் என்ற இடத்தில் உள்ளது பிரபல அடுக்குமாடி குடியிருப்பு. அதன் 24வது மாடியில் 5 வயது மகளுடன் வசித்து வருகின்றனர் ஒரு தம்பதி. தந்தை பணிக்கு சென்று விட, தாயும் முக்கிய வேலையாக வெளியில் சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த 5 வயது சிறுமி, தவறுதலாக ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் வெளியில் வந்து விட்டாள். மீண்டும் வீட்டுக்குள் செல்ல முயற்சித்த போது, தலை கம்பிக்குள் மாட்டிக் கொண்டு விட்டது. பயத்தில் அலறி இருக்கிறார் சிறுமி.

சிறுமியின் அழுகுரல்...

சிறுமியின் அழுகுரல்...

வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண்ணின் காதில் , சிறுமியின் அழுகுரல் சத்தம் விழுந்திருக்கிறது. ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது என அஞ்சிய படியே ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த அவர் அப்படியே உறைந்து விட்டார்.

ஜன்னலில் மாட்டிய சிறுமி...

ஜன்னலில் மாட்டிய சிறுமி...

காரணம் 79ன் அடி உயரத்தில், 5 வயது பக்கத்துவீட்டு சிறுமி ஜன்னல் கம்பிகளுக்குள் மாட்டியபடி கதறிக் கொண்டிருந்தது தான். உடனடியாக போலீசுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தார் அப்பெண்.

தீயணைப்புத் துறையினரின் முயற்சி...

தீயணைப்புத் துறையினரின் முயற்சி...

அதற்குள் கீழே கூட்டம் கூடி விட, தீயணைப்புத் துறையினர் உட்புறமாக தாளிடப்பட்டிருந்த சிறுமியின் வீட்டுக் கதவை திறக்க ஒருபுறமும், மறுபுறம் பக்கத்து வீட்டு ஜன்னல் கம்பிகளை உடைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

கடும் போராட்டம்...

கடும் போராட்டம்...

இரண்டு முயற்சிகளுமே வெற்றி பெற, பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக இடுப்பில் கயிறு கட்டிய படி ஒருவர் சிறுமியை நெறுங்கினார். அதற்குள் வீட்டிற்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள் சிறுமி கீழே விழுந்து விடாத வண்ணம் பாதுகாப்பாக பிடித்துக் கொண்டனர்.

மீட்கப்பட்ட சிறுமி...

மீட்கப்பட்ட சிறுமி...

ஒரு வழியாக பெரும் போராட்டத்திற்குப் பின் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டாள். தகவலறிந்து ஓடி வந்த சிறுமியின் பெற்றோருக்கு அப்போது தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

தனிமை கொடுமை...

தனிமை கொடுமை...

மரணத்தின் வாசல் வரை போய் பார்த்து விட்டு வந்த அச்சத்தில் அச்சிறுமி மிரண்டு காணப்பட்டாள். சிறு குழந்தைகளாஇ தனியே வீட்டில் விட்டுச் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஓர் உதாரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+