இப்பவும் சொல்றேன்.. பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் போலியானதுதான்: திக்விஜய்சிங்

டெல்லியில் 2008ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சில நாட்களில் டெல்லி ஜாமியா நகர் பகுதியில் பாட்லா ஹவுஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறி போலீசார் முற்றுகையிட்டனர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 7 பேர் பதுங்கியிருப்பதாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஷாஹ்சத் மட்டும் கைது செய்யப்பட்டார். இந்த மோதலில் டெல்லி என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி மோகன்சந்த் சர்மாவும் உயிரிழ்ந்தார்.
இந்த சம்பவத்தில் கைதான ஷாஹ்சத் மீது பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளரை சுட்டுக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி ராஜேந்தர் குமார் சாஸ்திரி நேற்று பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் உண்மையானதே. பிடிபட்ட ஷாஹ்சத் குற்றவாளியே. அவருக்கான தண்டனை விவரம் ஜூலை 29-ந் தேதி அறிவிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை ஷாஹ்சத்தின் உறவினர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் தற்போதும் இந்த என்கவுன்ட்டர் போலியானதுதான் என்று சாடியுள்ளார். முன்பும் இதே கருத்தையே திக்விஜய்சிங் கூறியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி இக்கருத்தை நிராகரித்துள்ளது.
ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறவே காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக சாடியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications