இஷ்ரத் என்கவுன்ட்டர் வழக்கு- பிபி பாண்டேவை கைது செய்ய தடை! கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!

2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், ப்ரனேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சிபிஐ விசாரணையில் ஐ.பி. மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரி ராஜேந்திர குமாருக்கும் இந்த போலி என்கவுன்ட்டரில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் அகமதாபாத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அண்மையில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், அகமதாபாத் புறநகரில் குஜராத் போலீசார் 4 பேரை சுட்டுக் கொன்றது போலி என்கவுன்ட்டர். இந்த போலி என்கவுன்ட்டரை குஜராத் போலீசாரும் மத்திய புலனாய்வு அமைப்பான ஐபியும் இணைந்து மேற்கொண்டன. போலீஸ் அதிகாரிகள் டிஜி வன்சாரா, பி.பி. பாண்டே , தருன் பரோட், பார்மர், அமின் மற்றும் ஐபி அதிகாரி ராஜேந்திர குமார் ஆகியோர் மீது சிபிஐ கொலைக் குற்றம்சாட்டியது.
இதில் போலீஸ் அதிகாரி பிபி பாண்டே நீண்டகாலமாக தலைமறைவாக இருந்து வருகிறார். இதனிடையே அவர் தம் மீதான குற்றச்சாட்டை எதிர்த்தும் தம்மை கைது செய்ய தடை கோரியும் அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது விசாரணை நீதிமன்றத்தில் பிபி பாண்டேவை 2 நாட்கள் கைது செய்ய இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், திங்கள்கிழமையன்று அவர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications