தனியறையில் சிறுவர்களை பூட்டிய ஆசிரியர்: கதவை உடைத்து மாணவர்களை மீட்ட பொதுமக்கள்
லக்னோ: தவறு செய்த மாணவர்களை தண்டிக்கும் விதமாக தனியறையில் வைத்து பூட்டிய ஆசிரியர், சிறுவர்களை திறந்து விடாமல் மறதியில் வீடு சென்ற சம்பவத்தால் உத்திரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது பெற்றோர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள கோஜ்வா பகுதியில் சரை சுர்ஜன் பிரிவில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளிய்யில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களான ஆயுஷ் மற்றும் ரதி ஆகியோர் மிகுந்த பசியின் காரணமாக, மதிய உணவை வகுப்புகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது ஆசிரியருக்கு தெரியாமல் சாப்பிட்டுள்ளனர்.
அதனைக் கண்டறிந்த ஆசிரியர், மாணவர்களைத் தண்டிக்கும் விதமாக, அவர்களாஇ ஒரு தனியறையில் வைத்துப் பூட்டியுள்ளார். பின்னர் ஞாபக மறதியில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்று விட்டார். அடைத்து வைக்கப் பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் திறந்து விடாததால் பயத்தில் அழத் தொடங்கியுள்ளனர் அச்சிறுவர்கள்.
பூட்டிய அறைக்குள் குழந்தைகளின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து சிறுவர்களை காப்பாற்றியுள்ளனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆவேசமாக அப்பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளனர்.
பின்னர், காவல் துறையினரின் தலையீட்டால் அவர்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications