நீடிக்கும் கனமழை… உதகை, கூடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரு தினங்களுக்கு விடுமுறை
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் தாலுகாக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக உதகை, மைசூர் சாலையில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். முறிந்து விழுந்த மரங்கள் மின்சார டிரான்பார்மரில் விழுந்த காரணத்தினால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மரங்களை அகற்றுவது, மின்இணைப்பை சரிசெய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மழையால் இப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை, கூடலூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வால்பாறையிலும் கனமழை கொட்டி வருவதால் அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான சோலையாறு அணை நிரம்பி வழிகிறது.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications