ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 4 பேர் கைது?

நேற்று மாலை இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கட்டா ஷாகுல், பஷீர், குட்டி, பாசில் என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 19ம் தேதி சேலத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸார் படத்தை வெளியிட்டு அறிவித்தனர்.
மேலும் பீர் முகம்மது, கிச்சன் புகாரி, பஷீர் ஆகியோர் குறித்தும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சிலருக்கு ரமேஷ் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கிச்சின் புகாரியின் கூட்டாளிகளான கட்டா ஷாகுல், பஷீர், குட்டி, பாசில் ஆகியோரைப் போலீஸார் கண்காணித்து வந்தனர். நேற்று மாலை அவர்களைப் போலீஸார் கைது செய்ததாகவும், 145 டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications