திருட்டு லாட்டரி விற்ற ஈரோடு மாவட்ட தேமுதிக நிர்வாகிக்கு கல்தா
ஈரோடு: ஈரோட்டில் திருட்டு லாட்டரி விற்ற தேமுதிக துணை செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு தெற்கு மாவட்ட தேமுதிக துணை செயலாளர் டி.எஸ். எம். (எ) தனசண்முகமணி. அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி கட்சி தலைவர் விஜயகாந்த் அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஈரோடு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் கூறுகையில்,
சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்த தனசண்முகமணி லாட்டரி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்ததையடுத்து அவர் தொழிலை நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டார்.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வது குறித்து அவருக்கு 3 முறை எச்சரிக்கை விடுத்தேன். மேலும் அறிவுரையும் வழங்கினேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications