வேதாந்தா குழுமத்துக்கு 2-ம் கட்ட கிராம சபை கூட்டத்திலும் பழங்குடிகள் கடும் எதிர்ப்பு!
லாஞ்சிகர்: ஒடிஷாவில் வேதாந்தா குழுமத்தை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற 2-ம் கட்ட கிராம சபை கூட்டத்திலும் பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஒடிஷாவின் கலஹாண்டி மற்றும் ராயகடா மாவட்டத்தில் அமைந்துள்ள நியாம்கிரி மலைப்பகுதியில் டோங்க்ரியா கோந்த் என்ற பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நியாம்கிரி மலைப் பகுதியில் ஏராளமான பாக்சைட் தாது உள்ளது.
இந்த பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு மாநில அரசு அனுமதி கொடுக்கப்பட்டது. கலஹாண்டியின் லாஞ்சிகரில் வேதாந்தா குழுமம் செயல்படத் தொடங்கியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து நியாம்கிரி மலைவாழ் கிராம சபைகளின் முடிவே இதில் இறுதியான தீர்ப்பு என உச்சநீதிமன்றம் ஏப்ரல் 18-ந் தேதி அறிவித்தது.
இதனடிப்படையில் அண்மையில் முதல் கட்ட கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கிராம சபைகளுமே வேதாந்தா குழுமம் செயல்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து இராண்டாம் கட்டமாக இன்று 7 கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைகளுமே வேதாந்த குழுமத்தின் பாக்சைட் தாது வெட்டி எடுக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நியாம்கிரி மலையானது தங்களது சாமி, கலாசார உரிமை, மூதாதையர் வாழ்ந்த இடம் என்பதால் அதை வெட்டி தாது எடுக்க அனுமதி கொடுக்க முடியாது என்பது பழங்குடி மக்களின் கருத்து.
இதனால் வேதாந்தா குழுமத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications