மருத்துவ மாணவி பாலியல் கொடுமை: சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் தடை

கடந்த டிசம்பரில், டெல்லியில், ஓடும் பேருந்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் மீதான வழக்கில் தீர்ப்பு ஆகஸ்ட் 5-ம் தேதி வழங்கப்படும் என்று டெல்லி சிறார் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனிடையே சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நேரத்தில் சிறார் குற்றவாளிக்கு எப்படி தீர்ப்பளிக்க முடியும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பு தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவை சிறார் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று மனுதாரர் சுப்பிரமணியசாமிக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர். பின்னர் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications