பஸ் ஸ்டாண்டில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற குடிகார ‘கண்டக்டர்’ கைது
பாட்னா: பஸ் ஸ்டாண்டில் வைத்து, மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவனைக் கைது செய்துள்ளனர் போலீசார்.
உத்தரபிரதேசம் பாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் மோடில்லாஹ் கான் (35). இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான கானால், அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரூபி கோபம் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டாராம்.
கான் கண்டக்டராகவும், அவரது மனைவி ரூபி தனியார் மருத்துவமனையில் உதவியாளராகவும் பணி புரிந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, ரூபிக்கு போன் செய்த கான், தான் அவரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். அதனை நம்பி, காய்காட் பேருந்து நிலையத்திற்கு தனது மகனோடு வந்துள்ளார் ரூபி.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பஸ் ஸ்டாண்டிலேயே ரூபியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் கான். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரூபி பலியானார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக தலைமறைவானார் கான்.
மகன் கண்ணெதிரே மனைவியைக் கொன்ற குற்றவாளியைப் பிடிப்பதற்காக இரு தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டது. அதில், அருகில் இருந்த பஸ் ஸ்டாண்ட் அருகே கான் கைது செய்யப் பட்டார்.
கொலைக்கானக் காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications