திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் குண்டு வெடிக்கும்... கடிதத்தால் பரபரப்பு
திருச்சி: திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆகஸ்ட் 3ம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அலுவலகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஒரு இன்லேன்ட் கடிதம் வந்தது. அதில் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளோம். அது ஆகஸ்ட் 3ம் தேதி வெடிக்கும். இந்த குண்டுவெடிப்புக்கு ஏற்பாடு செய்தவர் கருணா இப்படிக்கு சுல்தான் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் நேற்று இரவு கோவிலுக்கு விரைந்து சென்றனர். போலீஸ் கமிஷனர் அபினவ் குமார் முன்னிலையில் மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் வீரர்கள் தீவிர சோதனையில் இறங்கினர். ஆனால் தீவிர சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை.
எனவே கடிதம் புரளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த போலீஸ் சோதனையால் கோவிலில் பூஜைகள் பாதிக்கப்பட்டது. மேலும் கோவிலிலும் பரபரப்பு ஏற்பட்டது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருணா என்ற பெயருக்குரியவர் சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். அவரிடமும் போலீஸார் விசாரித்தனர். ஆனால் அவர் மீது குற்றம் இருப்பதாக தெரியவில்லை. எனவே சைக்கில் ஸ்டாண்ட் ஒப்பந்தம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஷமிகள் யாரேனும் இப்படி கடிதம் அனுப்பியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இருப்பினும் இந்தக் கடிதத்தை அலட்சியமாக எடுக்காமல் போலீஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications