For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சின்னச் சின்ன மாநிலங்கள் மக்களுக்கு நல்லது - தமிழக கட்சித் தலைவர்கள் கருத்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பெரிய மாநிலங்களைப் பிரித்து சிறிய மாநிலங்களாக உருவாக்குவது மக்களுக்கு நிறைய பலன்களையேக் கொடுக்கும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநில அறவிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் தனி மாநிலக் கோரிக்கைகள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளன.

தமிழகத்திலும் ஏற்கனவே மாநிலப் பிரிவினை குறித்த கோஷங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. தற்போது பல்வேறு தலைவர்களும் அதை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

இன்னும் 22 மாநிலங்கள் தேவை- ராமதாஸ்

இன்னும் 22 மாநிலங்கள் தேவை- ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், இந்தியாவில் இன்னும் 22 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு கணிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

அங்கெல்லாம் வளர்ச்சி இல்லை...

அங்கெல்லாம் வளர்ச்சி இல்லை...

மேலும் அவர் கூறுகையில், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர் ஆகியவை உருவாக்கப்பட்ட பின்னர் அங்கெல்லாம் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை உணர வேண்டும் என்றார்.

இதில் என்ன தவறு

இதில் என்ன தவறு

கொங்கு நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், மவாட்டங்கள், தாலுகாக்கள் பிரிக்கப்படும்போது மாநிலத்தைப் பிரிப்பதில் தவறில்லையே.

கொங்கு நாடு அவசியம் தேவை

கொங்கு நாடு அவசியம் தேவை

கோவையைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் சென்னையைப் போல கோவையும் உருவெடுக்கும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

தெலுங்கானாவை வரவேற்போம்- சீமான்

தெலுங்கானாவை வரவேற்போம்- சீமான்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறுகையில், ஆந்திராவில் உள்ள ஒவ்வொருவரும் தெலுங்கானா முடிவை மனதார வரவேற்க வேண்டும் என்றார்.

English summary
The Pattali Makkal Katchi, Kongu Nadu Munnetra Kazhagam and the NaamThamizha rKatchi, headed by filmmaker Seeman, welcomed the move to carve out a Telangana state from Andhra Pradesh. Welcoming the Congress Working Committee's decision to recommend the creation of Telangana, PMK chief S Ramadoss said there were demands to create 22 more states in the country and the Centre should consider reasonable demands. "Bifurcated states like Uttarkhand, Jharkhand and Chhattisgarh have seen very good growth. I have been urging [the Centre] to create new states since small is beautiful," Ramadoss said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X