For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்ற சவுதி அரேபிய இளைஞர்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் ரமலான் மாதம் 1 முதல் 20 தேதி வரை 17வது ஆண்டாக நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டியில் சவுதி அரேபியாவின் ஆதில் முஹம்மது அல் கெய்ர் முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத் தொகையாக பெற்றார். இதனை ஷேக் மக்தூம் பின் முஹம்மது வழங்கினார்.

இரண்டாம் இடத்தை பெற்ற சாட் நாட்டைச் சேர்ந்த அல்ஹாஜ் மஹம்மத் டிஜிட்டா 200,000 திர்ஹம் பரிசையும், மூன்றாம் இடத்தை பிடித்த லிபியாவின் அப்துல் பாரி ஆர் அலி பிசுப்சு 150,000 திர்ஹம் பரிசுத் தொகையையும் பெற்றனர்.

International Quran award contest: Saudi youth emerges winner

அதனைத் தொடர்ந்து பெல்லோ அமதா மஹ்மத் (நைஜீரியா), உமர் முஹம்மது ஆதம் கோட் (சூடான்), ஜமாலுதீன் எல் கிக்கி (ஆஸ்திரேலியா), சையத் அலி உமர் பல்கதிஷ் அல் ஜாபரி (ஐக்கிய அரபு அமீரகம்), அஹமது அலி தாஹா (லெபனான்), அப்துல்லா அரிபி (அல்ஜீரியா), பட்டேல் வசில் (பிரான்ஸ்) ஆகியோர் நான்கு முதல் 10 இடங்களைப் பெற்றனர்.

இவர்களுக்கு 65 ஆயிரம் திர்ஹத்திலிருந்து ஒவ்வொரு தரத்திற்கும் ஐயாயிரம் குறைத்து 35,000 திர்ஹம் வரை வழங்கப்பட்டது. மிகவும் அழகான முறையில் கிராஅத் ஓதிய ஐவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

அவர்களது விபரம் வருமாறு:

முஹம்மது நஜ்முஸ் சாகிப் ரும்மான் (வங்கதேசம்)

இப்ராஹிம் சயீத் (ஏமன்)

முஹம்மது அஷ்ரஃப் (எகிப்து)

உலுல் அம்ரி ஜெய்னுதீன் (இந்தோனேசியா)

அஹ்மது ஹரிர் (ஆப்கானிஸ்தான்)

இவர்கள் முறையே திர்ஹம் 5000, 4000, 3000, 2000 மற்றும் 1,000 பரிசு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமீரக அமைச்சர்கள், ஷேக்குகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

English summary
A Saudi Arabia based youth has emerged the winner in the international quran award contest held in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X