நீலகிரி தொடங்கி மதுரை வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி தொடங்கி மதுரை வரை 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக கத்திரி வெயில் தொடங்கிவிட்டால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். தார் ரோடே உருகி ஓடும் அளவுக்கு வெயில் இருக்கும். ஆனால், இப்போது மழை பரவலாக பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும், தஞ்சை, நாகை, திருவாரூர் என டெல்டா மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் இன்றும் நாளையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மே.19ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மழையின் தாக்கம் இருக்கும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை பொறுத்தவரையில், இன்று (17-05-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications