செப்டம்பர் 21ம் தேதி இலங்கை வடக்கு மாகாணக் கவுன்சில்தேர்தல்
கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு செப்டம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழர்களின் தாயகத்தை உள்ளடக்கிய பகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று மாலை மத்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடரப்பட்டது. அதே நாளில், மத்திய, வட மேற்கு மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

நேற்றே வேட்பு மனு தாக்கல் முடிந்தது
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது.

என்ன முடிவு வரும்
இந்தத் தேர்தலை சர்வதேச அளவில் உள்ள தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளன.

மக்களுக்கு விமோச்சனம் கிடைக்குமா
இங்கு நடைபெறவுள்ள தேர்தலால் தமிழ் மக்களுக்கு விமோச்சனம் கிடைக்குமா என்ற அபிலாஷையும் எழுந்துள்ளது.

ராணுவத்தைக் குவித்து தேர்தல்
ஆனால் வடக்கு மாகாணத்தின் முழு பகுதிகளிலும் ராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது ராஜபக்சே அரசு. எனவே தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என்பது சந்தேகமாகவே உள்ளது.

தமிழ் தேசிய கூட்டணி வெல்லுமா
இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணிக்கும், ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிலவும். தமிழ் தேசிய கூட்டணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

டக்ளஸுக்கு முதல்வர் பதவி கிடையாது
இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பி்ல முதல்வர் வேட்பாளராக தற்போது அமைச்சராக ஒட்டிக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications