தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையை சீரமைக்க்க கோரி சிபிஎம் நடைப்பயணம்
தூத்துக்குடி: தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்ககோரி நடந்த நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் சாலையானது மிகவும் பழுதான நிலையில் குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையிலுள்ள அதிகப்படியான குறுகிய வளைவுகள், நகர்பகுதிகளில் சாலையோரம் தேங்கி கிடக்கும் மணல்குவியல்களால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் திருச்செந்தூருக்கு வாகனங்களில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் மற்றும் பயணிகளின் நலன்கருதி தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்கவேண்டும் என்று பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையை சீரமைக்ககோரி தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் இருந்து புறப்பட்ட நடைபயணத்தை மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா துவக்கி வைத்தார். இதேபோன்று திருச்செந்தூர் வஉசி திடலில் இருந்தும் பேரணி துவங்கியது. இந்த இருகுழுவினரும் இன்று மாலை திருச்செந்தூர் வழித்தடத்திலுள்ள ஆத்தூருக்கு வந்து சேர்கின்றனர்.
நடைபயணத்தை தொடர்ந்து ஆத்தூரில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது.

-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications