குற்றாலம் சாரல் விழா: பயணிகளை கவர்ந்த பராம்பரிய கார்கள்
குற்றாலம்: குற்றாலம் சாரல் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. நிறைவு நாளை முன்னிட்டு பாரம் பாரிய கார்கள் கண்காட்சி நடைப் பெற்றது. சாலையில் வண்ணமயமாக அணிவகுத்துச் சென்ற கார்களை ஏராளமான பயணிகள் கண்டு ரசித்தனர்.
சாரல் திருவிழா கடந்த 27.ம் தேதி கோலகலமாக தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தொடர்ந்து தினமும் பல்வேறு கலை நிகழ்சிகள் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடைபெற்றன.
சாரல் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு நடந்தது. கார்கள் அணிவகுப்பினை தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன் துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் கலெக்டர் சமயமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

கார் கண்காட்சி
நிறைவு நாளான நேற்று கார் கண்காட்சி நடைபெற்றது. இந்த கார் கண்காட்சி அணிவகுப்பில் 1921.ம் ஆண்டுமுதல் 1982 வரை தயாரிக்கப் பட்ட பல்வேறு வகையான 22 கார்கள் சாலைகளில் ஊர்வலமாக சென்றன. அணிவகுப்பை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

பயணிகள் உற்சாகம்
சவர்லெட், ஆஸ்டின், போர்டு, ஹிந்துஸ்தான், மோரீஸ், ஸ்டாண்டர்டு, பென்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான கார்களின் அணிவகுப்பினை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு கழித்தனர்.

பழமையான கார்கள்
இந்த கண்காட்சியில் காஜாபீடி நிறுவனத்தின் 7கார்களும்,சங்கர் சிமிண்ட் ராமன் என்பவரின் 2கார்களும்,நெல்லை குட்டி என்பவரது 2 கார்கள் உள்ளிட்ட 22கார்,ஜீப்.போன்றவை இடம் பெற்றன.

வெளிச்சத்தில் தொடங்கலாமே
கார் கண்காட்சி 3 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 6 மணிக்குத்தான் அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். வெளிச்சமாக இருக்கும் போதே கார் அணிவகுப்பு நடைபெற்றால் இன்னும் ஏராளமானோர் கண்டு ரசித்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

நாய்கள் நடனம்
விழாவின் 5ம் நாளில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஜெர்மன் சப்போட் கிரேட்டான், பாக்ஸா,பொமோரியன்,கோல்டன்ரெட்ரிவேர்,உள்ளிட்ட 23வகை களை சேர்ந்த 142 நாய்கள் கலந்து கொண்டன.இதில் கன்னிவகை நாய்கள் அதிக பட்சமாக 32.ம் சிப்பிபாறை வகை நாய்கள்26.ம் லேப் ரடார் வகை நாய்கள் 15ம் இடம் பெற்றிருந்தன.

அசத்திய நாய்
சுத்தம்,ஆரோக்கியம் ,கட்டளைக்கு கீழ் படிதல் போன்ற பல்வேறு அம்சங்களில் ஐயப்பன் என்பவரது நாய் முதல் பரிசை தட்டி சென்றது.நாய்கள் கண்காட்சியில் கலந்துக் கொண்ட நாய்கள் ஒவ்வென்றும் சுற்றுலாப் பயணிகளை அசத்தியவண்ணம் சென்றது காண்போரை கவர்ந்தது.

ஆண்டுதோறும் ரசிக்கலாம்
இந்த ஆண்டு சாரல் திருவிழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதன்முறையாக காய்கறி கண்காட்சி, மலர் கண்காட்சி, நாய்கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோன்று ஆண்டுதோறும் கண்காட்சிகள் நடத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications