ஈழ உணர்வு மூலம் இணைந்தோம்… திருமணம் பற்றி சீமான்
சென்னை: இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார். செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது.
உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார்.
மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது:

ஈழ உணர்வாளர் காளிமுத்து
கயல்விழியின் தந்தை மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து சிறந்த தமிழ்பேச்சாளர். தீவிர தமிழ் ஈழ உணர்வாளர். அவரது அரசியல் பயணத்தில் பல்வேறு கூட்டங்களில் தமிழ் ஈழம் குறித்தும், தேசிய தலைவர் பிரபாகரன் குறித்தும் பேசி வந்துள்ளார்.

சிறு வயது முதலே கயலுக்கும் ஈழக் காதல்
இதனால் அவரது மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது.ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.

என் மீது பதிந்த கயலின் பார்வை
நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழ போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். இந்த போராட்டங்கள் அவரை கவர்ந்துள்ளது.

கயலுடன் முதல் பேச்சு
பிரபாகரனின் மகன் தம்பி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அம்பலமான சமயத்தில் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது கயல்விழி என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

தமிழர் துயரங்களுக்காக வருத்தப்பட்டார்
தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.ஈழப்போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி எனக்கு பிடித்து இருந்தது.

நண்பர்களின் வற்புறுத்தல்
அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த டைரக்டர் மணிவண்ணன் அய்யா பழநெடுமாறன் மற்றும் எனது நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தனர்.

கயலை சந்தித்தேன்
ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்த என்னை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது. இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும் நானும் சந்தித்து கொண்டோம். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தேன்.

முறைப்படி பேசி முடிவு
இதையடுத்து எனது பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம். ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது என்றார் சீமான்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications