நிலக்கரி வழக்கு-சிபிஐக்கு உரிய ஆவணங்களை வழங்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐக்கு தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ தரப்பில் யாரை வேண்டுமானாலும் விசாரிக்க அனுமதி வழங்க முடியாது.. அரசு அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கொடுக்க தற்போது 3 மாத கால காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேண்டுமானால் 1 மாதத்துக்குள் முடிவெடுக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று வாதிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களை அரசின் ஏன் அனுமதி பெற வேண்டும்? இந்த வழக்கில் உரிய ஆவணங்களை எந்த ஒரு தாமதமும் இல்லாமல் சிபிஐக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஆகஸ்ட் 25-ந் தேதி வரை நடத்தப்படும் விசாரணை நிலவர அறிக்கையை ஆகஸ்ட் 29-ந் தேதி தாக்கல் செய்யவும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications