இதயம் காயப்பட்டுள்ளது, வேதனையை அடக்க முடியவில்லை: இயக்குனர் சேரன்

மகள் தாமினியின் செயலால் கவலையில் உள்ள சேரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னை ஏராளமானோர் செல்போனில் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் என்னால் யாருடனும் பேச முடியவில்லை. பேசுகையில் என்னால் வேதனையை அடக்க முடியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட வேதனை. இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க நான் ஒன்றும் ஹீரோ இல்லை என்பது எனக்கு தெரியும். சினிமா வேறு நிஜ வாழ்க்கை என்பது வேறு. மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய போராடும் ஒரு தந்தையாக என்னை பார்க்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விவகாரத்தில் என் சொந்த பலத்தை பயன்படுத்தாமல் சட்டத்தின் உதவியோடு பிரச்சனையை தீர்க்கவே விரும்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது நான் அழுதேன். என் மகள் மீது இருக்கும் பாசத்தால் அழுகிறேன். திரையுலகினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். என் இதயம் காயம்பட்டுள்ள இந்த நேரத்தில் திரையுலகினரின் ஆதரவு வலிக்க மருந்தாக உள்ளது.
என் மகள் மீது எந்த தவறும் இல்லை. அவளுக்கு வெறும் 20 வயது தான் ஆகிறது. வாழ்க்கை பற்றி புரியாத வயதில் இருக்கிறாள். இது கோபப்படுவதற்கான நேரம் இல்லை. என் மகளுக்கு நல்லது நடக்கவே போராடி வருகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications