தாமதமாக ஒன்றும் கடித எழுதவில்லையே...

Subscribe to Oneindia Tamil

கருணாநிதி மேலும் தனது அறிக்கையில், "அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு பல வாரங்களுக்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அதாவது 2.8.2013 அன்று தான் அந்த மசோதாவினால் தமிழகத்திற்கு ஏற்படக் கூடிய பாதகங்களை விளக்கி பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார். முதலமைச்சரே இத்தனை நாட்களுக்குப் பிறகு, அந்த பாதகங்களை எழுதும் போது, நான் எப்படி அந்த மசோதாவின் பாதகங்களை அறிந்து கொண்டு மசோதாவிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்க முடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆரம்பம் முதலே நான் எதிர்த்து வந்திருக்கிறேன். 2011 ஆம் ஆண்டிலேயே இது குறித்து மாநில அரசின் கருத்துரை கேட்கப்பட்ட போதே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20.12.2011 அன்றே நான் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். 25.12.2011 அன்று பிரதமர் சென்னை வந்த போதும் இந்த மசோதா மீதான தமிழகத்தின் நிலைப்பாடு குறித்த கோரிக்கை மனு அவரிடம் அளிக்கப்பட்டது. 8.2.2012 மற்றும் 9.2.2012 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெற்ற மாநில உணவு அமைச்சர்கள் கூட்டத்திலும் தமிழகத்தின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் 27.12.2012 அன்று பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். கடந்த மே மாதம் நாடாளுமன்ற மக்களவையில் இதற்கான சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்ட போதும், இதற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் 10.6.2013 அன்று டெல்லியில் திட்டக் குழு துணைத் தலைவர் முன்பு நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் இதற்கு எனது எதிர்ப்பினை நான் தெரிவித்தேன்.

இது குறித்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்த உடனேயே, இந்தச் சட்டத்தினால் தமிழகத்திற்கு ஏற்படக் கூடிய பாதகங்களை சுட்டிக் காட்டி, 4.7.2013 அன்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணைச் செயலாளர் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 62.55 விழுக்காடு ஊரகப் பகுதி மக்களும், 37.79 விழுக்காடு நகர்ப்புற மக்களும் தான் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய முடியும் என்ற எண்ணிக்கையை தெரிவித்ததையடுத்தும், 5.8.2013 அன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்கும் போது இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்பதைக் கருத்தில் கொண்டும், 2.8.2013 அன்று பிரதமருக்கு ஒரு விரிவான கடிதத்தினை எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தில், இந்த அவசரச் சட்டம் தமிழக மக்களுக்கு எவ்விதத்தில் பாதிப்பளிக்கும் என்பதை விரிவாக சுட்டிக்காட்டி, அதில் என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்து இருந்தேன். அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை எதிர்ப்பது என்ற ஒரே நிலைப்பாட்டைத் தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, "கடந்த ஒரு மாதமாக முதலமைச்சர் இந்த மசோதா பற்றி ஏன் பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ கடிதம் எழுதி எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை?" என்று கருணாநிதி கேட்டிருப்பது உண்மையை மூடி மறைக்கும் செயல். "2.8.2013 அன்று தான் அந்த மசோதாவினால் தமிழக மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகங்களை விளக்கி பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். முதலமைச்சரே இத்தனை நாட்களுக்குப் பிறகு அதன் பாதகங்களை எழுதும் போது நான் எப்படி அந்த மசோதாவின் பாதகங்களை அறிந்து கொண்டு, மசோதாவிற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருக்க முடியும்?"" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் கருணாநிதி.

தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த உடனேயே, 4.7.2013 அன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டேன் என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்னுடைய அறிக்கையை பார்த்த உடனாவது இந்த மசோதா குறித்து என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டு தனது கருத்தினை கருணாநிதி தெரிவித்து இருக்கலாம். இல்லை, மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்தினை பார்த்து அல்லது தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் கேட்டறிந்து தனது கருத்துகளை தெரிவித்து இருக்கலாம். மாநிலங்களவைத் தேர்தலில் தன் மகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியை அணுகும் கருணாநிதி, தமிழக மக்கள் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை அணுக ஏன் தயங்குகிறார்? தமிழக மக்களின் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை அணுக கருணாநிதிக்கு மனமில்லை போலும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+