இளங்கோவன் பேட்டி ஒரு பத்திரிகையில் மட்டுமே வரவில்லை...இதோ...

Subscribe to Oneindia Tamil

அதே அறிக்கையில், டி.கே.எஸ். இளங்கோவன் 22.7.2013 அன்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பேட்டி அளித்ததாகவும், அது ‘தினத்தந்தி' நாளேட்டில் மட்டும் வெளிவந்ததாகவும் சொல்லப்படுகிறது என கூறியுள்ளார் கருணாநிதி. உண்மை நிலை என்னவென்றால், இந்தச் செய்தி, 23.7.2013 நாளிட்ட தினமலர்' பத்திரிகையில் "மத்திய அரசுக்கு ஆதரவு: தி.மு.க. திடீர் அறிவிப்பு" என்ற தலைப்பிலும், டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில பத்திரிகையில் "DMK to support UPA's Food Security Bill, but sets riders" என்ற தலைப்பிலும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணைய தளத்தில் "DMK may support UPA on crucial Food Bill" என்ற தலைப்பிலும், தி இந்து' இணைய தளத்தில், "DMK may support UPA on Food Bill" என்ற தலைப்பிலும் செய்திகள் வெளியாகி உள்ளன என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அடுத்தபடியாக, "டி.கே.எஸ்.இளங்கோவன் தான் தி.மு. கழகத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியா?", அவர் என்ன நாடாளுமன்ற கழகக் குழுவின் தலைவரா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறார் கருணாநிதி.

டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. மக்களவை உறுப்பினராக மட்டுமல்லாமல் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகவும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியைவிட ஒரு படி மேலே இருக்கின்றவர் இளங்கோவன். தி.மு.க.வில் உயர் பதவியிலே இருக்கின்ற ஒருவர் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தி.மு.க. ஆதரிக்கும் என்று பேட்டியளிக்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் எப்படி இருக்க முடியும்? தி.மு.க. தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இது போன்றதொரு பேட்டியை டி.கே.எஸ். இளங்கோவன் அளித்து இருக்க முடியுமா? அல்லது தன்னிச்சையாக கூறியிருப்பாரேயானால் இது பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளி வந்தவுடனேயே கருணாநிதி ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி தற்போது மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+