துலாம் ராசிக்கு வெளிநாட்டு யோகம்... கடன் தீர்ந்து பணவரவு அதிகரிக்கும் வாரம்!
Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்திற்கு பிரவேசமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு பாக்கியத்தில் சூரியன் அற்புதமாக இருக்கிறார். வெளியூர், வெளிநாடு பயணம் செல்லும் யோகம் அமைப்பு உள்ளது. வேற்று மொழி மனிதர்கள் மூலமாக ஆதாயம் உண்டாகும். பூஜை, புனஸ்காரம், விமானப் போக்குவரத்து, வெளிநாடு செல்லும் அமைப்பு, பயணங்கள் ஏற்படும். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால் மறைமுக ஸ்தானங்களில் சிறிய சிறிய சூட்டுக் கொப்பளங்கள், தொற்றுகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.
கடன் தீரும்
பெற்றோர் உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். உறவுகளுக்குள் இருந்து வந்த பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும். ரத்தபந்த உறவுகள் விஷயத்தில் கோபப்படாமல் இருப்பது ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.
ஆரோக்கியம்
வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எந்த விஷயங்களை செய்யும் முன்பும் யோசித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் ஹார்மோன் குறைபாடு, அலர்ஜி விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முருகர் வழிபாடு செய்வது, சுப்பிரமணிய புஜங்கத்தைக் கேட்பது நன்மையைத் தரும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும்.
நிதானம்
நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடு பொடியாகும். எல்லா விஷயங்களிலும் அதீதமான நன்மைகள் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். வேலைக்குப் பிரச்சனை வருவதுபோல சில கம்யூனிகேஷன்கள் ஏற்படும். அந்த விஷயங்களில் பொறுத்துக் கொண்டு, நிதானமாக செயல்படுவது நல்லது.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வீடு, நிலம், ரியல் எஸ்டேட், கம்யூனிகேஷன், புரோக்கரேஜ் தொடர்பான விஷயங்களில் சில தாமதங்கள் வரும் வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். சிவபெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications