தமிழகத்தில் இனி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ. 25?
சென்னை: தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ரூ. 20 அல்லது 25 கட்டணமாக நிர்ணிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் கட்டண விகிதம் அறிவிக்கப்படும்.
அதன் பின்னர் இந்த கட்டணத்தை தமிழகத்தில் உள்ள அத்தனை ஆட்டோ டிரைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படும்.

முதல் ஒரு கிலோமீட்டருக்கு
முதல் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ. 20 வசூலிக்கப்படும்.

2 கிலோமீட்டருக்கு ரூ. 25
அதேபோல முதல் 2 கிலோமீட்டருக்கு டெல்லியில் உள்ளதைப் போல ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படும்.

முதல்வர் பார்வைக்கு
புதிய ஆட்டோ கட்டண விகித விவரம் முதல்வர் ஜெயலலிதா பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும் அமல்படுத்தப்படும்.

உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26ல் தாக்கல்
ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்ட்26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வருகிறது. அதற்குள் இந்த முடிவுகள் அறிவிக்கப்படும். உச்சநீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில்
ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பான முத்தரப்புக் குழுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது நினைவிருக்கலாம்.

4 மணி நேர கூட்டம்
நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம் இரவு 8 மணி வரை நடந்தது. இதில் திமுக தொழிற்சங்கம் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

ரூ. 30 கேட்ட தொழிற்சங்கங்கள்
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 30 நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் அதை அரசு ஏற்கவில்லை.

அவ்வப்போது கட்டணம் மாறும்
பெட்ரோல் விலை உயர்வின்போது அதற்கேற்ப கட்டணத்தையும் மாற்ற வேண்டும் அல்லது வருடத்திற்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications