ஜம்மு காஷ்மீரில் இன்று காலை மீண்டும் பாக். தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.
இதன் பின்னரும் தொடர்ந்தும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று காலை 11.30 மணியளவில் பூஞ்ச் பகுதியில் நூர்கோட், நகர்கோட், மும்தாஜ் உள்ளிட்ட 13 இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையின் வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு 9.50 மணிக்கும் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் ராணுவத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை 6 மணியளவில் பூஞ்ச் டேக்வார் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications